பிரதான செய்திகள்

ராஜாங்க அமைச்சர் அதிருப்தி! தனிப்பட்ட உடமைகளை அங்கிருந்து அகற்றியுள்ளார்.

நாட்டின் முக்கியமான அமைச்சு ஒன்றின் ராஜாங்க அமைச்சர், அந்த அமைச்சில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலகத்தில் இருந்து தனது தனிப்பட்ட உடமைகளை அங்கிருந்து எடுத்துச் செல்வதாக தகவல்கள் கூறுகின்றன.

தமது தனிப்பட்ட பொருட்களை அப்புறப்படுத்திக்கொண்டு அரசாங்கத்திற்குரிய பொருட்களை திருப்பி கொடுத்து விடுமாறு அவர் தனது ஊழியர்கள் குழுவிற்கு அறிவித்துள்ளார்.

இந்த ராஜாங்க அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய போகிறாரா என்ற உத்தியோகபூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. அமைச்சில் நடக்கும் சில காரியங்கள் மேற்கொள்ளப்படும் விதம் சம்பந்தமாக இந்த ராஜாங்க அமைச்சர் சில காலமாக அதிருப்தியில் இருப்பதாக தெரிவருகிறது. 

எவ்வாறாயினும் இராஜாங்க அமைச்சரின் இந்தச் செயல்பாடுகள் தொடர்பில் எந்தவிதமான உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

15 ஆயிரம் உணவுப் பொதிகளை வழங்கிய எஸ்.எம் மரிக்காா்

wpengine

பஷிலின் மனு மீதான விசாரணை இன்று ஒத்திவைப்பு

wpengine

றம்புட்டான் பழத் தோற்றத்தில்! டெல்டா மற்றும் அல்பா

wpengine