பிரதான செய்திகள்

ராஜஷ்சவின் புதிய அமைச்சரவையில் நசீர் அஹமட் சுற்றுச்சூழல் அமைச்சர்

17 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்…

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 17 பேர் இன்று, (18) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

  1. திரு. தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
  2. திரு. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சு
  3. திரு. ரமேஷ் பத்திரன – கல்வி, பெருந்தோட்டக் கைத்தொழில்
  4. திரு. பிரசன்ன ரணதுங்க – பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுலா
  5. திரு.திலும் அமுனுகம – போக்குவரத்து, கைத்தொழில்
  6. திரு கனக ஹேரத் – நெடுஞ்சாலைகள்
  7. திரு.விதுர விக்கிரமநாயக்க – தொழில் அமைச்சு
  8. திரு.ஜானக வக்கும்புர – விவசாயம், நீர்ப்பாசனம்
  9. திரு.ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம், சமுர்த்தி அபிவிருத்தி
  10. திரு. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல்
  11. திரு. விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வளப் பாதுகாப்பு
  12. திரு. காஞ்சன விஜேசேகர – வலுசக்தி, மின்சக்தி
  13. திரு. தேனுக விதானகமகே – இளைஞர் மற்றும் விளையாட்டு
  14. திரு. நாலக கொடஹேவா – வெகுசன ஊடக அமைச்சு
  15. திரு. சன்ன ஜெயசுமன – சுகாதாரம்
  16. திரு. நசீர் அஹமட் – சுற்றுச்சூழல்
  17. திரு. பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை

ஜனாதிபதி அவர்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் மற்றும் நிதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் அமைச்சுக்களில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

(புதிய அமைச்சரவையில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரை இன்று (18) இரவு 7.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலிகளிலும் ஒளிபரப்பப்படும்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
18.04.2022

Related posts

சமுர்த்தி உத்தியோகத்தருக்கு நடந்த அணியாயம்

wpengine

அமைச்சர் றிசாட் பதியுதீனின் பணிப்புரைக்கு அமீர் அலி விஜயம்.

wpengine

நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் பொரளையில் கைது!

Editor