பிரதான செய்திகள்

ராஜபஷ்ச,விமல் மற்றும் கம்மன்பில இரகசிய சந்திப்பு

நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சந்திப்பானது ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் வார இறுதியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக அரசியல் தரப்பு வட்டாரங்களை சுட்டிக்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும், இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாகவும் சுமூகமாகவும் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்திப்பில் வைத்து அமைச்சர் பசில் ராஜபக்ச, எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பினை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளதால் அனைத்து அமைச்சர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கத்திற்குள் காணப்படும் நெருக்கடிகள் குறித்து ஆராய வேண்டும், கலந்துரையாட வேண்டும்.

அத்துடன் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அமைச்சர்கள் விமல் வீரவன்சவும், உதய கம்மன்பிலவும் ஐக்கியத்துடன் செயற்படுவதற்கும் அரசாங்கத்திற்கு உறுதியான ஆதரவை வழங்குவதற்கும் இணங்கியுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்!

wpengine

தாருஸ்ஸலாமில் இராப்போசன விருந்தும், உறுப்பினர்கள் சந்திப்பு

wpengine