பிரதான செய்திகள்

ராஜபக்ஷவுக்கு இடையில் பனிப் போர்! நாமலின் மாமாவுக்கு பணிப்பாளர் பதவி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் பனிப் போர் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.


இதனால், ஜனாதிபதி தனது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் சிறந்த மாற்றத்தை எதிர்பார்த்து கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களின் எதிர்பார்ப்பு சிதைந்து போயுள்ளது.

அரச நிறுவனங்களுக்கு பிரதானிகளை நியமிக்க ஜனாதிபதி நியமித்த நிபுணத்துவ குழுவை புறந்தள்ளி விட்டு குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களை அரச நிறுவனங்களின் பதவிகளுக்கு நியமித்து வருகின்றனர்.

ஜனாதிபதி நியமித்துள்ள குழுவை ஒரு பக்கம் தூக்கி வீசிவிட்டு, நாமல் ராஜபக்சவின் மாமனார் மற்றும் ரோஹித்த ராஜபக்சவின் மாமியார் ஆகியோரை ஸ்ரீலங்கன் விமான சேவையின் பணிப்பாளர்களாக நியமித்துள்ளனர் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரசின் கடன் ஒருவருடத்தில் 8.3வீத அதிகரிப்பு

wpengine

“முரண்பாட்டு சமன்பாடு” கவிதை தொகுப்பு வெளியீடு

wpengine

வில்பத்து விவகாரம்! மிகத்தெளிவான அறிக்கைகளை நாங்கள் தயாரித்துள்ளோம்-ஹக்கீம்

wpengine