பிரதான செய்திகள்

ராஜபக்ஷவின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும்

முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே  சைட்டம் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.   அப்போது  அதனை ஆதரித்த மஹிந்த ராஜபக்ஷ தற்போது  அதனை  எதிர்ப்பது குறித்து என்ன கூறுவது என்று எனக்குத் தெரியவில்லை. அவரின் மூளையைத்தான்   பரிசோதனை செய்யவேண்டும் என்று   முன்னாள் உயர்கல்வி அமைச்சரும் தற்போதைய சமூக வலுவூட்டல் அமைச்சருமான  எஸ்.பி திஸாநாயக்க   தெரிவித்தார்.

 

இலங்கைக்கு தனியார் மருத்துவ கல்வி நிலையங்கள் அவசியமாகும். எம்மை விட  கீழ்நிலையில் உள்ள பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருக்கும்போது ஏன் இலங்கையில் இருக்கக்கூடாது. திறமையிருந்தும் அரச  பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம்  அனுமதி வழங்கியே தீரவேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற  ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

Related posts

மன்னாரில் மழை! பல விவசாயிகள் பாதிப்பு! நடவடிக்கை எடுக்காத அரச அதிகாரிகள்

wpengine

மாகாண சபை முறைமையை ஒழிக்க வேண்டும்

wpengine

இலங்கையிலுள்ள ஒரேயொரு முஸ்லிம் முதியோர் இல்லம் காத்தான்குடியிலேயே காணப்படுகின்றது- ஷிப்லி பாறுக்.

wpengine