பிரதான செய்திகள்

ராஜபக்ஷவின் முன்னிலையில் பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினர் சத்தியப்பிரமாணம்.

வணக்கத்திற்குரிய வல்கம அரியகித்தி தேரர் இன்று (22) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பொல்கஹவெல கணுமலே தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய ஆர்.எம்.விஜேரத்ன அவர்களின் மறைவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வணக்கத்திற்குரிய வல்கம அரியகித்தி தேரர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கௌரவ அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் சரித்த ஹேரத், சமன்பிரிய ஹேரத், யூ.கே.சுமித் உடுகும்புர, வடமேல் மாகாணசபையின் தவிசாளர் டிகிரி அதிகாரி, பொல்கஹவெல பிரதேச சபை தவிசாளர் லிவேரா குணதிலக உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியில் ஒரு தொகை ஆயுதம் மீட்பு

wpengine

இன்று பிரதமர் ஹரிணி யாழ் விஜயம் .!

Maash

புதிய அமைச்சர்கள் : மாறாத மாற்றம்..!

wpengine