பிரதான செய்திகள்

ராஜபக்ச அரசை வீழ்த்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே வீதியில் இறங்கியுள்ளோம்.

ராஜபக்ச அரசை விரட்டியடிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையே கொழும்பு போராட்டம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டு மக்களைத் துன்பத்துக்குள் தள்ளிய, தேசிய வளங்களை விற்பனை செய்த, அதேபோல் எதிர்காலத்தில் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் ராஜபக்ச அரசை வீழ்த்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே வீதியில் இறங்கியுள்ளோம்.இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை எமது போராட்டம் தொடரும்” என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது ஆரம்பம் மட்டுமே, 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகர்வுகள் அதிரடியாக இருக்கும். மக்களுடன் அரசு விளையாட முடியாது என்று போராட்டத்தில் பங்கேற்ற ராஜித சேனாரத்ன எம்.பி. தெரிவித்துள்ளார்.

Related posts

சமுர்த்தி விட்டுதிட்ட நிதி மோசடி! விசாரணை வெளியிடப்படவில்லை

wpengine

அரசே எங்கள் சுகாதார உரிமையை மீறாதே எனக் கூறி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

wpengine

இந்தியாவின் கடும்போக்கு பாரதீய ஜனதா கட்சி இலங்கைக்கு மக்கள் அச்சம்

wpengine