பிரதான செய்திகள்

ராஜபக்சவின் வீட்டிற்கு மீண்டும் பலத்த பாதுகாப்பு

முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு மீண்டும் பலத்த பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.  

கோட்டாபயவின், மிரிஹான வீட்டுக்கு இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றது. 

குறித்த வீட்டுக்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட படையினரின் எண்ணிக்கையை விட, தற்போது அதிகளவான அதிரடிப் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய  நாடு திரும்புவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் செல்லக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டபாய  இன்றைய தினம் மீண்டும் நாடு திரும்புவதாக ஏற்கனவே  கூறப்பட்டது. ஆனபோதும் அவர் இன்று நாடுதிரும்ப மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்காகவே இவ்வாறு காலம் தாமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புலனாய்வு பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் சென்று நாடு திரும்பிய பின்னரே, கோட்டாபய  நாடு திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதுகாப்பமைச்சரான தாம் இல்லாத நேரம், நாட்டிற்குள் வர வேண்டாமென ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Related posts

சமஷ்டியால் இனவாதம் தலைதூக்கும் என்பது பைத்தியக்காரத்தனம்

wpengine

தேசத்துரோகிகளாக பிரகடனம் செய்யப்பட்ட 190 பேரையும் தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்துக.

wpengine

வவுனியாவில் மர்மமான முறையில் கொலையான காவல் துறை அதிகாரி

wpengine