பிரதான செய்திகள்

ராஜபக்சவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் நாளை அநுராதபுரத்தில்! மைத்திரி இணைவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் நாளை அநுராதபுரத்தில் தொடங்கவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலஹபெரும இதனை தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் இன்று கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“கோத்தபாய ராஜபக்சவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் நாளை அநுராதபுரத்தில் உள்ள சல்கடோ மைத்தானத்தில் இடம்பெறும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் பலர், மகிந்த ராஜபக்சவுடன் இந்த மேடையில் இணைந்துகொள்வார்கள்.
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நாடு முழுவதும், மாவட்ட அளவிலான 26 பேரணிகளை நடத்தவுள்ளோம்.வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கும் செல்வோம்.

மாவட்ட அளவிலான கூட்டங்களை தவிர 138 வாக்காளர் மட்ட பேரணிகளும் நடத்தப்படும். எங்கள் பிரசாரத்தின் முதல் கட்டம் கடந்த மாதமும், இரண்டாம் கட்டமும் கடந்த வாரம் தொடங்கியது” என அவர் கூறியுள்ளார்.

Related posts

வவுனியாவில் அபாய ஒலி! பயணிகள் அச்சம்

wpengine

இருத்தலுக்கான இறுதி விளிம்பில் ஜெனீவாக் களம்!

wpengine

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடு .

Maash