செய்திகள்பிரதான செய்திகள்

ராஜபக்சர்களின் மற்றுமொரு மோசடி விரைவில்! அம்பலப்படுத்தப்பட உள்ள ஜனாதிபதி.

ராஜபக்சர்களின் மற்றுமொரு மோசடி குறித்த தகவல்கள் விரைவில் அம்பலப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரகலய போராட்டத்தின் போது தீக்கிரையான வீடொன்றுக்காக ராஜபக்சக்களில் ஒருவர் மோசடியான முறையில் நட்டஈடு பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினர் நட்டஈடு பெற்றுக்கொண்ட போதிலும் உண்மையில் வீட்டின் உரிமையாளர்கள் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

செவணகல பகுதியில் தீக்கிரையான வீடொன்றுக்கு இவ்வாறு ராஜபக்ச குடும்பத்தினர் நட்டஈடு பெற்றுக்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீக்கிரையான வீட்டின் காணி உரிமை வேறு ஒருவரின் பெயரில் இருந்ததாகவும், வீட்டின் உரிமையும் வேறு ஒருவரின் பெயரில் இருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எனினும் ராஜபக்ச குடும்பத்தினர் இந்த வீட்டுக்கான நட்டஈட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவல்கள் அண்மையில் கிடைத்ததாகவும், இதை இன்னும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புத்தள பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜனாதிபதி இந்த விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினர் என ஜனாதிபதி குறிப்பிட்ட போதிலும் யார் இவ்வாறு மோசடியாக நட்டஈடு பெற்றுக்கொண்ட ராஜபக்ச குடும்ப உறுப்பினர் என்பது பற்றிய விபரங்களை ஜனாதிபதி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related posts

மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கல்லூரி சம்பியனாக தெரிவு

wpengine

34 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட வீதி – நடந்து செல்லத்தடை

Maash

மன்னாரில் இருந்துவந்து றிஷாட் பதியுதீன் மட்டக்களப்புக்கு சேவை செய்ய தேவையில்லை -யோகேஸ்வரன்

wpengine