உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமிர் புதினின் ரகசிய காதலி மீது அமெரிக்கா தடை

ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமிர் புடினின் ரகசிய காதலியாகக் கருதப்படுபவர்  அலினா கபெவா. .
 உக்ரேன் மீது  கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதியிலிருந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் ரஷ்யா மீது குறிப்பாக ரஷ்ய ஜனாதிபதி புடின், ரஷ்ய இராணுவ தளபதிகள், தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்கள் என பல தரப்பின் மீது  அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள்  பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமிர் புதினின் ரகசிய காதலியாக அறியப்படும் அலினா கபெவா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத்  தடைகளை விதித்துள்ளதோடு அவரது கடவுச் சீட்டையும் , அவரது சொத்துக்களையும் முடக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான அலினா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார் என்பதும் அவர் ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான ஆர்.டி (ரஷ்யா டுடே)-யின் இயக்குனராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பழமைவாய்ந்த இலங்கை முஸ்லிம்களின் தேசப்பற்று பிற சமூகங்களால் சந்தேகிக்கப்படும் நிலைமை

wpengine

கணவன் அல்லது மனைவி எவ்வாறு மடக்கி வைத்துகொள்ளுவது

wpengine

யானையுடன் மோட்டர்சைக்கிள் மோதி வவுனியா இளைஞன் மரணம் . .!

Maash