தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

ரஷ்யாவில் விரைவில் பேஸ்புக் தடை

பாது­காப்பு உள்­ளிட்ட கார­ணங்­க­ளுக்­காக இரா­ணுவ சிப்­பாய்கள் மற்றும் அதி­கா­ரிகள் சமூக வலைத்­த­ளங்­களை பயன்­ப­டுத்த தடை விதிக் கும் வகையில் புதிய சட்­டத்தை ரஷ்யா அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

ரஷ்ய இரா­ணு­வத்தில் பணி­யாற்றும் தொழில்­முறை சிப்­பாய்­களும், மற்ற இரா­ணுவ அதி­கா­ரி­களும் பாது­காப்பு கார­ணங்­க­ளுக்­காக சமூக வலைத் ­த­ளங்­களை பயன்­ப­டுத்­து­வதை தடை செய்யும் சட்ட மசோதா ஒன்றை ரஷ்ய பாது­காப்பு அமைச்­சகம் உரு­வாக்­கி­யுள்­ளது.

இரா­ணுவ வீரர்கள் இணை­யத்­த­ளங்­களில் பதி­வேற்­றப்­பட்­டுள்ள புகைப்­ப­டங்கள், காணொளிகள் மற்றும் இதர அம்­சங்கள் எதி­ரிக்கு விவ­ரங்­களை அளிக்­கக்­கூடும் என்று இந்த மசோ­தாவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

முக்­கி­ய­மாக இரா­ணுவ வீரர்கள் ஓரி­டத்தில் இருந்து கொண்டு பதி­வுகள் இடும்­போது, அந்த பதிவுகள் எங்­கி­ருந்து பதி­வி­டப்­பட்­டன என்­பதை மற்­ற­வர்கள் எளி­தாக அறிந்து கொள்ளும் வித­மாக உள்­ளது. இந்த கார­ணங்­களால் புதிய மசோதா கொண்டு வரப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு இரா­ணுவ அமைச்­சகம் தெரி­வித்­துள்­ளது.

சமீ­பத்தில், ரஷ்ய வீரர்­களால் பதி­வேற்­றப்­பட்­டுள்ள சமூக ஊடக பதி­வுகள் உக்ரைன் மற்றும் சிரி­யாவில் படைப்­பி­ரி­வுகள் நிறுத்­தப்­பட்­டுள்ள தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

அடுத்­தாண்டு ஜன­வரி மாதம் இந்த சட்டம் அமு­லுக்கு வரும் என்று எதிர்­பார்ப்­ப­தாக ரஷ்ய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன

Related posts

வவுனியாவில் போதைப்பொருட்களுடன் ஐவர் கைது!

Editor

ஜோசப் முத்திரை பதித்திருப்பதாக அவரது மறைவையொட்டி வெளியிட்டுள்ள அனுதாபம்-ரவூப் ஹக்கீம்

wpengine

பாலியல் உணர்வினை தூண்டும் புகைப்படங்களை பிரான்ஸ் அமைச்சருக்கு அனுப்பிய பெண்!

wpengine