Breaking
Sun. Nov 24th, 2024

முகம்மத் இக்பால் சாய்ந்தமருது 

அன்புக்குரிய ரவுப் ஹசீர் சேர் அவர்களே

முஸ்லிம் காங்கிரசின் பதவிநிலை அதிகார ஒழுங்குமுறை பின்பற்றப்படுகின்றதா ?

தலைவர் அஸ்ரப் அவர்களின் இருபதாவது நினைவு நிகழ்வு மூதூரில் நடைபெற்றதாக கேள்வியுற்றோம்.

அந்நிகழ்வின் ஒழுங்கமைப்புக்காக சென்றுகொண்டிருப்பதாக உங்களது முகநூளில் பதிவிட்டிருந்ததனை இரண்டுநாட்களுக்கு முன்பு காணக்கிடைத்தது.

விடயத்துக்கு வருகிறேன்.

முஸ்லிம் காங்கிரஸ் என்பது முஸ்லிம்களின் தேசிய கட்சி. இந்த கட்சிக்கு பல கட்டமைப்புக்களும், பதவிநிலைகளும் உள்ளது.

குறிப்பாக கட்சியின் தேசிய நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய அமைப்பாளர் அல்லது பிரதி தேசிய அமைப்பாளர் என்ற பதவிகளில் பிரமுகர்கள் இருக்கின்ற நிலையில், இவர்களின் பதவிகளை தாண்டி தாங்களே அத்தனை நிகழ்வுகளையும் தொடர்சியாக ஒழுங்கமைத்து வருகின்றீர்கள். இதற்கு காரணம் என்ன ?

தாங்கள் தலைவரின் சகோதரர் என்ற காரணத்தினால் கட்சியின் அத்தனை அதிகாரங்களையும் தங்களது கையில் எடுத்துள்ளீர்களா ? அவ்வாறென்றால் பெயரளவில் பதவிகள் எதற்கு ?

கட்சியின் ஒரு நிகழ்வு எந்த ஊரில் நடைபெறுகின்றதோ, அந்த ஊரைச்சேர்ந்த கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் அந்த மாவட்டத்தின் முக்கியஸ்தர்கள் ஆகியோர்களின் ஒத்துழைப்புடன் தேசிய அமைப்பாளர் அல்லது பிரதி தேசிய அமைப்பாளரினால் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்படல் வேண்டும். இதுதான் ஒழுங்குமுறையாகும்.  

ஆனால் எமது கட்சியில் அவ்வாறான ஒழுங்குமுறைகளும், சட்டதிட்டங்களும் பின்பற்றப்படுவதில்லை. மாறாக தடி எடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் என்ற நிலை காணப்படுகின்றது.

இந்த செயல்பாடானது கட்சியின் பதவி நிலையில் உள்ளவர்கள் அனைவரும் ஒரு போடுகாயாக பெயரளவில் உள்ளார்களே தவிர, எவருக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்று சிந்திக்க தோன்றுகின்றது.  

இவ்வாறான உண்மைகளை வெளியே கூறினால், அது தங்களது எதிர்கால அரசியல் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தினால் இவ்வாறான விடயங்களை கூறுவதற்கு பலர் அச்சப்படுவதனை காணக்கூடியதாக உள்ளது.

எனவே கட்சியின் தேசிய அமைப்பாளர் அல்லது பிரதி தேசிய அமைப்பாளர் பதவியை நீங்கள் பொறுப்பேற்பதன்மூலம் கட்சியின் ஒழுங்குமுறையை பேண முடியும் என்பது எனது நிலைப்பாடாகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *