பிரதான செய்திகள்

ரவி பதவி விலக வேண்டும்! ரஞ்சன் ராமநாயக்க

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

பிபிசி சிங்கள சேவையிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கருத்தை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.

Related posts

காங்கேணனோடை வீதி வடிகானுடன் செப்பனிடும் பணிகள் ஆரம்பம்.

wpengine

இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி பதவிப்பிரமாணம்

wpengine

வடக்கு அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் விக்னேஸ்வரன்

wpengine