பிரதான செய்திகள்

வசீம் தாஜூடினின் வழக்கு வௌியேறினார் அனுர

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்து இன்று நீதிமன்றத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.

அனுரவுக்கு பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த வௌ்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், மேல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து, இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, இன்று பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்து சந்தேகநபர் நீதிமன்றத்தில் இருந்து வௌியேறியுள்ளார்.

மரணமடைந்த றகர் வீரர் வசீம் தாஜூடினின் வழக்கில் சாட்சிகளை மறைக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அனுர சேனாநாயக்க, நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முஸ்லிம்களின் அபிலாஷைகளை புறந்தள்ளும் எந்தவொரு மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டோம்- அமைச்சர் றிசாத்

wpengine

தொல்லியற் திணைக்களத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராட்டம்!

Editor

குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய விசேட நாடாளுமன்றக் குழு நியமனம்!

Editor