செய்திகள்பிரதான செய்திகள்

”ரன் மல்லி” யின் சகா 33 கிலோ 106 கிராம் ஹெரோயினுடன் கைது . ,!

மாத்தறை – திக்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊருகமுவ பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்ஹேனகொட, ஊருகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 33 கிலோ 106 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள போதைப்பொருள் கடத்தல் காரரான ”ரன் மல்லி” என்பவரின் நண்பன் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர், ரன் மல்லிக்குச் சொந்தமான போதைப்பொருட்களை பல்வேறு பிரதேசங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (20) ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Related posts

புத்தளம் அறுவைக்காடு; புரியப்படாத புறச் சூழல் அரசியல்!

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

அமெரிக்காவின் வாய்போரினால் தாய்லாந்தில் தஞ்சமடையும் வடகொரியர்கள்

wpengine