பிரதான செய்திகள்

ரணில் 367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை

இலங்கையில் இன்று (23) முதல் அமலுக்கு வரும் வகையில் சொக்கலேட், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிகமாக தடைவிதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

அந்நியச் செலாவணிக் கையிருப்பை முகாமைத்துவம் செய்யும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சொக்கலேட், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் உடைகள், உள்ளாடைகள், கைக்கடிகாரங்கள், மின் கேத்தல்கள், உள்ளிட்ட 367 பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

Related posts

தமிழ் மொழி பதில் : ஆளும் தரப்பு mpக்கள் இனவாதம் பேசுவதாக அப்புஹாமி குற்றச்சாட்டு.

Maash

மன்னார் மாவட்ட புதிய மறை மாவட்ட ஆயர் நியமனம்

wpengine

களனி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம்!

Maash