பிரதான செய்திகள்

ரணில் விக்ரசிங்கவுக்கு எதிரான மனு நிராகரிப்பு

பிரதமர் ரணில் விக்ரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்தது.
கொழும்பு மாநகரசபை உறுப்பினர் ஷர்மிளா கோணவல இதனைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த முறை பரிசீலிக்கப்பட்ட போது, அதற்கு அடிப்படை எதிர்ப்பை வெளிப்படுத்திய பிரதமர் தரப்பு சட்டத்தரணிகள், இந்த மனுவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான மூலாதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என்பதால், இது குறித்து விசாரணை செய்யும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு இல்லை என்று சுட்டிக்காட்டினர்.

இதனை கருத்தில் எடுத்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரர்கள் குழாம், இன்று தமது பதிலை வழங்குவதாக அறிவித்திருந்தது.

இதன்படி இன்று இந்த மனு பரிசீலனைக்கு வந்த போது, அதனை நிராகரிகரிப்பதாக அறிவித்தது.
இதேவேளை நிராகரிக்கப்பட்ட இந்த மனுவை தாம் மீண்டும் உயர்நீதிமன்றில் சமர்ப்பிக்கவிருப்பதாக, மாநகரசபை உறுப்பினர் ஷர்மிளா கோணவல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரச நிறுவனம் ஒன்றின் பங்குதாரராக இருக்க முடியாது என்று தெரிவித்து, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Related posts

புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்த மு.கா.உறுதுணை மாஹிர்

wpengine

வடமாகாண பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

wpengine

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு வந்த நிதிகளை திருப்பி அனுப்பிய விக்னேஸ்வரன்! வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் வாய்மூடி மௌனம்

wpengine