Breaking
Sat. Nov 23rd, 2024

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தான் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார, மக்களின் எதிர்பார்ப்புகளை அடையாளம் கண்டு, அவர்களை பாதுகாப்பதுடன் அவர்களின் வாழ்வாதார நிலையை உயர்த்தும் பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (16)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், தரமில்லாத அரசாங்கம் வீட்டுக்குச் செல்வதற்கான காலம் சரியென்றும் அரசாங்கத்துக்கு முடியாதெனின், அவர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு வீட்டுக்குச் செல்லுமாறும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த்தாக குறிப்பிட்ட அவர், சஜித் மற்றும் ரணிலின் ஆட்சி தான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்தது என்பதை அவர் மறந்துவிட்டார் என குறிப்பிட்டார்.

அவர்களது ஆட்சியில் இந்த நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கியிருந்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை கண்டிருந்தால் இன்று ரணில் விக்கிரமசிங்க எதிர்கட்சியில் தனியான ஆசனத்தில் அமர்ந்திருக்கும் நிலை வந்திருக்காது எனவும் சுட்டிக்காட்டினார்.

ரணில் இன்று பொருளாதார வல்லுநர் போல் கருத்துகளை முன்வைத்து, பாராளுமன்றத்தில் பெரிய ஆளாக காட்ட முயல்கிறார் என தெரிவித்த ஜகத் குமார, அவர் மக்கள் ஆணையைப் பெற்று சரியாக தனத வேலைகளைச் செய்திருந்தால் சஜித் பிரேமதாச, பாராளுமன்றத்தில் இன்று சிறிய குழுவினருக்கு தலைவராக இருக்கும் அவசியம் ஏற்பட்டிருக்காது என்றார்.

அவர்களிடம் அதிகாரம் இருந்த போது மூளையில்லாமல் செயற்பட்டவர்கள் இன்று இந்த நாட்டு மக்களிடம் தமக்கு தாமே எல்லாம் தெரியும் என காட்ட முயற்சிக்கின்றனர்.

நல்லாட்சியில்  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கான நிலைமையை நாட்டில் ஏற்படுத்தி விட்டு, நாட்டின் பாதுகாப்புப் பிரிவு மீது நம்பிக்கை இல்லாமல் பழி வாங்கும் நோக்குடன் புலனாய்வு பிரிவனரை சிறையில் அடைத்து பாதுகாப்பு துறையை கேள்விக்குள்ளாக்கியபோது, அதே அரசாங்கத்தில் அங்கம் வகித்த சஜித் பிரேமதாச இந்த விடயங்களை கண்டுகொள்ளவில்லை என்றார்.

எனவே அவர்களிடம் அதிகாரத்தை வழங்க மக்கள் தயாராகவில்லை. அவர்களது அவசரத்துக்கு மக்கள் தயாரில்லை. மீண்டும் அவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து பழைய நிலைக்கு செல்ல என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *