பிரதான செய்திகள்

ரணில் பணம் கொடுக்கவில்லை ஞானசார தேரருக்கு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கூட்டு எதிர்க்கட்சியின் அழைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க பிரான்ஸிற்கு விஜயம் செய்து, பொதுபல சேனா பற்றி அவதூறு பிரச்சாரம் செய்துள்ளார்.

பிரான்ஸில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு பொய்யான தகவல்களை வழங்கியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தில் நீடிப்பதனை தவிர்க்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஞானசார தேரருக்கு பணம் வழங்கினார் என பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து பகிரங்க விவாதம் ஒன்றை நடத்தி உண்மையை தெளிவுபடுத்த முடியும் என திலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

Related posts

மாணர்களுக்கான உயர் தர கல்வி வழி காட்டல்கருத்தரங்கு -2016

wpengine

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுகிறார் சிரிநேசன் எம்.பி.

wpengine

இலங்கையின் முதலாவது இணைய வாசிகசாலை அங்குரார்பணம்.

wpengine