பிரதான செய்திகள்

ரணில் திருடன் தாக்குதல்! பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக பாராளுமன்றில் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதற்ற நிலைமை மோதலாக மாறி ஒருவருக்கு ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளும் கட்சியினர் மற்றும் கூட்டு எதிர்கட்சியினருக்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் போது உறுப்பினர்கள் இருவரும் தாக்குதல்களுக்குள் தலையிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த இரண்டு உறுப்பினர்களுக்கு துரத்தித் துரத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாரு யாரு திருடன்.ரணில் திருடன் என கூச்சலிட்டு துரத்தும் போது யாரு திருடன் யாரு திருடன்.மஹிந்த திருடன் என ஆளும் கட்சியினர் கூச்சலிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றி கொண்டிருக்கும் போது அவரை நோக்கி ஏதோ பொருள் வீசப்பட்டதாக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனால் 10 நிமிடங்களுக்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு!

wpengine

மன்னார் நகர இணக்க சபை உறுப்பினர்களுக்கான நியமனம்

wpengine

நீரில் மூழ்கி 17 வயது பாடசாலை மாணவன் பலி!

Editor