Breaking
Tue. Nov 26th, 2024

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புத்த பகவான் மனித மாமிசத்தை உண்டார் எனக் கூறி அவமதித்த வஹாப்வாத தவ்ஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

“சித்தார்த்த கௌதமரின் புனித கேசம் எதற்கு, அவரும் இந்தியர் தானே” என பிரதமர் தெரிவித்திருந்தமை தொடர்பில் பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுபல சேனா அமைப்பு இதனை கூறியுள்ளது.

இலங்கையில் மாத்திரமல்ல முழு உலகத்தின் நேசத்திற்குரிய புத்த பகவானை அமதிப்பது என்பது நாட்டில் வழமையாக இருந்து வருகிறது.

கடந்த காலங்களில் பௌத்த மதத்திற்கு எதிரான துஷ்ட சக்திகள் இதனை மேற்கொண்டு வந்தன.

தற்போது இது அரசியல் களத்திற்கும் வந்துள்ளமை கவலைக்குரியது. கடந்த 22 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய நாள் ஒன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக புத்த பகவானை சம்பந்தப்படுத்த முயற்சித்த சம்பவத்தை அருவருப்புடன் கண்டிக்கின்றோம்.

சிங்களத்தில் சரளமாக பேச முடியாத பிரதமரின் தாய்மொழி சிங்களமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியும் அடிப்படைவாத மத சக்திகளிடம் சிக்கியுள்ளனர்.

இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகளிடம் மண்டியிட தெரியுமே தவிர தற்போதைய தலைவர்களுக்கு தெளிவான அரசியல் நோக்கங்கள் கிடையாது.

நாட்டின் தற்போதைய தலைவர்கள் சர்வதேச சக்திகளின் கை பொம்மைகளாக மாறியுள்ளனர்.

கடன் பெறுவது, வரி அறவிடுவது, மக்களின் பணத்தை கொள்ளையிடுவது இவற்றை தவிர இந்த தலைவர்களுக்கு வேறு அடைக்கலம் கிடையாது.

அத்துடன் நாட்டு மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு அவற்றை தீர்ப்பதற்கான தெளிவான பலம் இந்த தலைவர்களுக்கு இல்லை.

நாட்டு தலைவர்கள் அண்மைய காலத்தில் வெளியிட்ட கருத்துக்களை பார்த்தால், இவர்களுக்கு நாட்டின் ஆட்சி அதிகாரம் கிடைத்தமையானது குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போலாகியுள்ளது என்பது தெளிவாகியுள்ளது.

இது அரண்மனை வாயில் காவலன் அரசன் ஆன நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *