பிரதான செய்திகள்

ரணில்,மைத்திரி அரசுக்கு சவால் மஹிந்த

தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சமகால அரசாங்கத்திடம் சவால் விடுத்துள்ளார்.

தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் ஒருவராலும் முடியாது என மஹிந்த தெரிவித்துள்ளார்.

கடவத்தையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது கூட்டத்தில் உரையாற்றும் போதே மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“எனது கடன் குறித்து கேட்கின்றனர். நாட்டின் வீதிகளில் சென்று பார்த்தால் கடனுக்கான பதில் கிடைக்கும். எனினும் சமகால அரசாங்கம் பெற்ற கடனுக்கு என்ன செய்துள்ளனர்.

வங்கியை கொள்ளையடித்து பெற்றவைகளுக்கு என்ன செய்தார்கள். அவற்றினை தேட ஆணைக்குழு அமைக்கின்றனர்.
தாஜுடீனுக்கு இறந்தும் நிம்மதி இல்லை. தேர்தல் காலங்களில் மீண்டும் அவரை தோண்டுகின்றனர் என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுடீன், மஹிந்தவின் புதல்வர்களால் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹிஸ்புல்லாஹ் கட்டிக்கொடுத்த நகர சபை கட்டடத்தை ஹாபீஸ் திறக்க திட்டம்! ஹிஸ்புல்லாஹ் காட்டம்

wpengine

கணவனின் சந்தேகம் இளம் பெண் தற்கொலை முயற்சி

wpengine

சட்ட விரோத மணல் அகழ்வு நடைபெறும் இடத்திற்கு ரவிகரன் விஜயம்

wpengine