பிரதான செய்திகள்

ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்து பாராளுமன்றத்தில் புகழ்பாடும் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

விடுதலைப்புலிகளின் இடைக்கால அரசு என்ற கோரிக்கையை ஏற்றுகொண்டிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2005 ஆம் ஆண்டிலேயே ஜனாதிபதியாகியிருப்பார் என சுட்டிகாட்டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டு அதனை நிராகரித்த தலைவரே பிரதமர் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்தமை துரதிர்ஷ்டவசமானது எனத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் இராணுவ வெற்றியை குருட்டுத்தனமான பயன்படுத்தி முன்னாள் ஆட்சியாளர்கள் இனங்களுக்கிடையில் பிளவுகளையும் ஏற்படுத்த முனைந்தனர் எனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 ஆண்டு கால பாராளுமன்ற அரசியல் வாழ்க்கை நிறைவை ஒட்டி வாழ்த்துக்களை தெரிவிக்கும் பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1977 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சியில் அரசியல் பிரவேசம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது நாற்பது ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார்.

அன்றைய காலத்தில் மத்திய பொருளாதார நிலைமைகளே காணப்பட்டன. இந்த நிலையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். கனவான்களுக்கு அவசியமான கொள்கையினைக் கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜே.ஆர்.ஜெயவர்த்தனவுக்கு நிழல்போன்று செயற்பட்டார்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன முன்னெடுத்த சந்தைப்படுத்தல் பொருளாதாரத்தில் நம்பிக்கை கொண்டிருந்தவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடன் இணைந்து பணியாற்றியதோடு சமூகப்பொருளாதாரக் கொள்கைகளையும் பின்பற்றலானார்.

நுண்ணறிவும் துணிவும் பொறுமையும் நிதானமும் கொண்டு விளங்கிவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு தலைவருக்கு இருக்கவேண்டிய குணாம்சங்களை கொண்டவராவார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்ற போது எதிராளிககள் என்றாலும் கூட கோபப்பட்ட சந்தர்பத்திலும் கூட அச்சுறுத்தல் விடுக்காது தெளிவாக கருத்துகளை முன்வைப்பவராக இருக்கின்றார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாசவுக்கு எதிராக குற்றப்பிரரேரணை ஒன்று கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்திலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எவ்விதமாக நேர்மையாக செயற்பட்டு இருந்தார் என்பதை பார்க்க முடியும். கொள்கை மீதான பற்றும் நேர்மையான செயற்பாடும் கட்சியின் மீதான அர்ப்பணிப்பும் அவருடைய சிறப்பான பண்புகளாக காணப்படுகிறது.

தனிப்பட்ட முறையில் அவருடன் இணைந்து செயற்பட்ட ஒருவராக நானும் இருக்கிறேன், 2001 ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது அமைச்சரவையில் இருந்து நான் அகற்றப்பட்டதன் பின்னரான ஐந்து மாதகாலப் பகுதியில் அவருடைய சீர்செய்யும் செயற்பாடுகளை என்னால் நன்கு அவதானிக்க முடிந்தது.

அதேநேரம் எந்தவொரு விமர்சனத்தினையும் எதிர்கொள்ளுதல் மற்றும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்ற தன்மையும் அவரிடத்தில் காணலாம். குறிப்பாக விடுதலைப்புலிகளுடன் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திட்ட போது பிரதமர் ரணிலுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

விடுதலைப்புலிகள் முன்வைத்து இடைக்கால அரசு கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றிருதால் 2005 ஆம் ஆண்டே அவர் அவ்வாறு செய்யவில்லை; நாட்டின் நலன் கருது அதனை நிராகரித்தார்.

அவ்வாறிருக்கையில் கடந்த காலத்தில் இருந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தமையை இட்டு நான் கவலையடைகிறேன். இராணுவம் பெற்ற யுத்த வெற்றியை குருட்டுத்தனமாக பயன்படுத்தினார்கள். இனங்களுக்கிடையில் பிரிவினைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தார்கள் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினார்கள்.

அவற்றுக்கெல்லாம் அதிராக எதிர்கட்சியில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குரலெழுப்பி இன ஒற்றுமையை மையப்படுத்தி செயற்பட்டார். அவருக்கு எமது கட்சி மற்றும் மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

Related posts

பொருளாதார நெருக்கடியின் ஆழம் மற்றும் அகலத்தை அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை-அனுரகுமார

wpengine

காஷ்மீரில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடியை மெகபூபா முப்தி சந்தித்தார்

wpengine

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக தர்மபால நியமனம்

wpengine