பிரதான செய்திகள்

ரணிலுக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை 51 பேர் கையொப்பம் .

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட உள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை யோசனையில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனையில் கையெழுத்திடுவதாக அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காமினி லொக்குகே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ்,
“ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிய பின்னர், அடுத்த பிரதமரை நியமிப்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பு எனக் கூறியுள்ளார்.

பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை வென்றவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாகவும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

தீவிரவாத செயற்பாடுகளுக்கு மரண தண்டனை

wpengine

அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

wpengine

மறைந்து போன கரையோர மாவட்டம்

wpengine