பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஜே.வி.பி நிபந்தனை அடிப்படையில் ஆதரவு வழங்கும் என்று அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இதுதொடர்பில் தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் சிறப்பாக செயற்படவில்லை என்று குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதனை ஆதரிக்க ஜே.வி.பி. தயாராக உள்ளது.
ஆனால் அதற்குப் பதிலாக கட்சிகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியின் காரணமாக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுக்கு ஜே.வி.பி ஒருபோதும் ஆதரவளிக்காது. அது தொடர்பாக ஆராய்ந்த பின்னரே தீர்மானத்தை அறிவிக்கும்.
ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவியை பாதுகாப்பதோ அவரிடமிருந்து அதைப் பறிப்பதோ எமது நோக்கம் இல்லை என்றும் அனுரகுமார திசாநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.