பிரதான செய்திகள்

ரணிலுக்கு எதிரான விசாரணை அடுத்த வாரம்

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை அடுத்த மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்திற்கு எதிராக தம்பர அமில தேரரினால் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை அடுத்த வருடம் ஜனவரி 7ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிரானது.

இதன் காரணமாக ஜனாதிபதியின் இந்த செயற்பாடு தமது அடிப்படை உரிமையை மீறியுள்ளதாகவும் தெரிவித்து மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“வட்ஆப்“ பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி ஊட்டும் தகவல்

wpengine

சமத்துவத்தின் அடிப்படையில் ஊழல், மோசடி நிறைந்த கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவருவோம் .

Maash

சிறந்த கல்வி முறைமையை கட்டமைக்க அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படும். -ஜனாதிபதி-

Editor