பிரதான செய்திகள்

ரணிலுக்கு ஆதரவு றிஷாட்,ஹக்கீம் ஐ.தே.க தெரிவிப்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளன.

ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூம் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ர​ஷாட் பதியூதீன் ஆகியோர் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விடயம் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டுவது தொடர்பான நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாகவிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை கோரி அதன் தலைவர்களிடம் ஜனாதிபதி பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார்.

இந்நிலையிலேயே, குறித்த இரு கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதற்கு இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக வெடிக்க உள்ள போராட்டம்!

Maash

கண்டி,அம்பாறை மீதான தாக்குதல் ஐ.நா.வில் ஆவண திறைப்படம்

wpengine

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி! நிதி மோசடி பிரிவில்

wpengine