பிரதான செய்திகள்

ரணிலுக்கான அமைச்சரவை பத்திரம் வாபஸ்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆலோசகர் ஒருவரை நியமிப்பதற்காக  அமைச்சரவையில்  நேற்று சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் இறுதி நேரத்தில்  வாபஸ் பெறப்பட்டது.

சமரசிறி என்பவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலோசகராக நியமிக்கவேண்டும் என்ற   அமைச்சரவை பத்திரம் ஜனாதிபதி  தலைமையில் நேற்றுக் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில்  சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த அமைச்சரவைப் பத்திரம் மீளப் பெறப்பட்டதாக அமைச்சர் ராஜித்த சேனாரட்ன குறிப்பிட்டார்.

எவ்வாறெனினும், வாபஸ் பெறப்பட்டமைக்கான காரணங்கள் குறித்துத் தெரிவிக்கப்படவில்லை.

Related posts

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சிறுபிள்ளைதனமான அரசியல் செய்கின்றது – அமீர் அலி

wpengine

நடிகை அனுபமா பரமேஸ்வரன் மன அழுத்தத்தில் இருக்கிறார்.

wpengine

தலைமன்னார் நாடுகுடா பகுதியில் ஒரு தொகை ஆயுதம்

wpengine