ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், உட்கட்சி பூசல் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கட்சிக்குள் இரண்டாக பிளவுபட்டுள்ள உறுப்பினர்கள் சஜித்திற்கும் ரணிலுக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வகிக்கும் தொகுதி அமைப்பாளர் பதவியை பறிக்க ரணில் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன்படி மாத்தறை, பண்டாரகம உட்பட பல தொகுதிக்களுக்கான புதிய அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவான கூட்டங்களை நடத்த அமைப்பாளர்கள் பலர் முயன்று வருவதன் காரணமாகவே ரணில் அதிரடியாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
ரணிலின் இந்த முடிவால் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சம் அடைந்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைமை தொடர்ந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு வழங்க ரணில் மறுப்பு தெரிவிக்கலாம் என பலரும் குழப்பத்தில் உள்ளனர்.
இதேவேளை சஜித் உங்களுடன் பேச வருகிறார் என்ற பிரச்சார கூட்டம் இன்று மாத்தறையில் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தினை அமைச்சர் மங்கள சமரவீர ஒழுங்கு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.