பிரதான செய்திகள்

ரணிலின் சதியினை புரிந்துகொள்ளாத சஜித்

நாடாளுமன்றத் தேர்தல் போட்டியிலிருந்து முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வெளியேறுவதற்கு ரணில் விக்ரமசிங்க வகுத்த வியூகமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மங்கள சமரவீர தனது முடிவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரையிலும், அதனை சஜித் பிரேமதாச அறிந்திருக்கவில்லை என முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.


ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன இவ்வாறு கூறியுள்ளார்.


இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
ரணிலின் அரசியல் செயற்பாடுகளின் இறுதி, சஜித்துக்குப் புரியாத புதிராகும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரும் பின்னரும், இவ்வாறே பல்வேறான அரசியல் காய்நகர்த்தல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.


இந்நிலையில், ரணிலின் அரசியல் வியூகத்தால், ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் பட்டியலில் சரிவு ஏற்பட்டுள்ளது.
தென் மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது போன்ற பல்வேறான சம்பவங்களை மக்கள் பார்க்கலாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீலங்கன் விமான சேவையில் நடந்த ஊழல் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

wpengine

சமுர்த்தி ஊடாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

wpengine

வட கொரியாவுக்கு மிரட்டல் கொடுத்தால்! அமெரிக்காவுக்கு ஆபத்து ஹிலாரி

wpengine