பிரதான செய்திகள்

ரணிலின் சதிக்கு பின்னால் அமைச்சர் ஹபீர் ஹாசிமா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் தெவனகல பிரதேசத்தை கொண்டுவரும் முயற்சிகள் தடுக்கப்பட்ட போதும் பிரதமர் ரணிலினால் அது தொல் பொருள்திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமையானது மிகவும் கவலையளிப்பதாக கேகாலை மாவட்ட சு.க அமைப்பாளர் லதீப் பாறூக் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

கேகாலை தெவனகல பிரதேசமானது முஸ்லிம்கள் காலா காலமாக வாழ்ந்து வருகின்ற ஒரு பிரதேசமாகும். இந்த பிரதேசமானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில் தொல் பொருள் திணைக்களத்தின் கீழ்கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது முஸ்லிம்களின் நியாயங்களைஏற்றுக்கொண்ட மஹிந்த அரசு அதனை கைவிட்டிருந்தது. இதன் போது கேகாலை மாவட்ட சு.கவை சேர்ந்த அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட்டிருந்தனர்.

ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசானது, தனது நூறு நாள் வேலைத் திட்ட காலப்பகுதியினுள் இந்த பிரதேசத்தை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது. இப் பிரதேசத்தை தொல் பொருள் திணைக்களத்தின் கீழ்கொண்டு வரும் வர்த்தமானி அறிவிப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங் நேரடியாகவே செய்திருந்தார். இந்தஆட்சியை கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய முஸ்லிம்களுக்கு இவ்வாட்சி செய்த முதல் கைம்மாறு இதுவேயாகும்.

தற்போது அந்த பிரதேசத்தில் எந்தவித செயற்பாடுகளும் முன்னெடுக்க முடியாத வகையில் தொல் பொருள்திணைக்களத்தால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு வாழும் அறுநூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் எந்தவித சிறு செயற்பாடுகளையும் மேற்கொள்ள முடியாத வகையில் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்.

இப் பிரதேசத்தில் எது மேற்கொள்வதாக இருந்தாலும் அப் பிரதேச அரசியல் வாதி என்ற வகையில் ஐக்கிய தேசியகட்சியின் செயலாளரான கேகாலையை சேர்ந்த கபீர் ஹாசிமிடம் நிச்சயம் வினவப்பட்ருக்கும். இவர் ஐக்கிய தேசியகட்சியின் செயலாளராக இருப்பதால் இவ்வாறானதொரு சதி முஸ்லிம்களுக்கு இடம்பெறப் போகிறதென்பதை முன் கூட்டியே அறிந்துமிருப்பார். இது நடைபெற்ற பிற்பாடு கூட, இவ்விடயத்தில் அவர் எந்தவித கரிசனையும் கொண்டதாக அறிய முடியவில்லை. இதனை வைத்துப் பார்க்கும் போது இந்த சதிகளின் பின்னால் அமைச்சர் கபீர் ஹாசிம் உள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது.

அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினுடைய காலத்தில் சு.கவைச் சேர்ந்த அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட்டார்களோ அதே போன்று, இது விடயத்தில் அமைச்சர் கபீர் ஹாசிம் உட்பட அனைத்து அரசியல் வாதிகளும் கரிசனை கொண்டுசெயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அக்கரைப்பற்றில் அநியாயமாக இடமாற்றப்பட்ட ஆசிரியர்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் முறையீடு

wpengine

மறிச்சுக்கட்டி போராட்டம்! அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த குழுவினர்

wpengine

குழந்தையை கொலை செய்து விட்டு கணவனுக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிய மனைவி

wpengine