பிரதான செய்திகள்

ரணிலின் கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் கலந்துகொள்ளவில்லை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் நான்காம் திகதி விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள தலைவர்களிடையே நேற்றைய தினம் விசேட சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

சுமார் மூன்று மணி நேரம் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்களான மனோ கணேசன், ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

எனினும், இந்த சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளவில்லை. இந்த விடயம் தற்போது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான எட்டு பேர் நாடாளுமன்ற அங்கம் வகிக்கும் நிலையில், அந்த கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளாமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் கண்டி மற்றும் அம்பாறை பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியிருந்ததாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றம் சுமத்தியிருந்தார்.

அத்துடன், உள்ளூராட்சி சபைகளில் ஐக்கிய தேசியக் கட்சி தமக்கு துரோகம் இழைப்பதாகவும், அது தொடர்ந்தால் பாடம் கற்பிக்க வேண்டிய நிலை வரும் என்றும் ஹக்கீம் சில நாட்களுக்கு முன்னர் எச்சரித்திருந்தார்.

இவ்வாறான நிலையில், நேற்று இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துகொள்ளாமல் போனமை கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தென்னிலங்கை மீனவர்களை தடைசெய்ய வேண்டும்! முசலி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் பிரமுகர்களுடனான சந்திப்பு

wpengine

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்!

Maash