ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவி மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலக சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றால், அவருக்கு தேவையான முறையில் புதிய பிரதமரை நியமிப்பதற்கும், கட்சியின் நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றால் அவருக்கு முழுமையான அதிகாரம் வழங்கிவிட்டு, தான் ஓய்வில் தனது நாட்களை கழிப்பதற்கு தீர்மானித்ததாக பிரதமர் தெரிவித்தார் என கூறப்படுகின்றது.
இதேவேளை மஹிந்த தரப்பில் கருத்து வெளியிட்ட முக்கியஸ்தர் ஒருவர், ரணில் விக்ரமசிங்க தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பினை இல்லாமல் செய்வதற்காக சஜித் தரப்பினர் இவ்வாறு போலியான செய்தி வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.