Breaking
Thu. Nov 14th, 2024

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க மகிந்த அணி தீர்மானித்திருக்கின்றது என்று மிக நம்பகரமாக அறியமுடிகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இதற்கான மந்திராலோசனைகளில் ஈடுபட்டனர் என தெரியவருகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்திலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆலோசனை கேட்காமல் எதிர்ப்பை வெளியிட்டமை, ரணிலிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தலா 2 கோடி ரூபா பெற்றுக்கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரம், அரசின் அநீதியான திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமை உட்பட பல காரணங்களை காட்டி இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது என்று மகிந்த அணியின் முக்கிய பிரமுகர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.

இதற்கான ஏற்பாடுகளைச் செய்து சட்ட ஆலோசனைகளைப் பெறும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுகின்றன எனவும் மேலும் அறியமுடிந்தது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *