Breaking
Sun. Nov 24th, 2024

இலங்கையின் இரண்டாவது கருதினால் பேராயர் பேரருட்தந்தை திரு மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் போதனைகள் மற்றும் செயற்பாடுகள் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்தெழுந்த ஞாயிறு பயங்கரவாத அனர்த்தத்த்தின் மறுதாக்கத்திலும் வன்செயல்களில் இருந்தும் மக்களை பாதுகாத்தும் மீட்டும் இருக்கின்றது.

மனிதர்கள், கடவுளையும் பிறரையும் அன்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய இயேசு, “அனைவரும் தம்மைப் போல் பிறரை அன்பு செய்யுமாறு வலியுறுத்தினார். பிறரைத் தீர்ப்பிட வேண்டாம் என்றும், பகைவரையும் அன்பு செய்ய வேண்டும் என்றும் அவர் போதித்தார். கடவுளை நம்பி வாழ வேண்டுமென்றும், உலகின் முடிவில் இறந்தோர் அனைவரும் உயிர்த்தெழுவர் என்றும், அப்போது ஒவ்வொருவரும் அவரவர் செயலுக்கு ஏற்ப நிலை வாழ்வையோ தண்டனையையோ பெறுவர் என்ற போதனைகளுக்கு அமைவாக,

கதிரினால் பேரருட்தந்தை திரு. மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள்,
“கடவுளின் பெயரால் யாரும் யாரையும் அழிக்க முடியாது. அதற்கான உரிமையும் அவர்களுக்கு கிடையாது. அவ்வாறு அவர்கள் அழிப்பார்களானால் அது கடவுளுக்கும் இயற்கைக்கும் மாற்றமானது. மற்றையவரோடு இணைந்து வாழ்வதையே இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள கொடை” என்ற கருத்தின் ஊடாக இலங்கையில் உள்ள மூவின மக்களின் மனங்களில் மாத்திரமன்றி உலகமக்கள் மனங்களிலும் இடம் பிடித்துவிட்டார்கள்.

வேதியியல் ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயிலின்படி அமைதிக்கான பரிசு “எவரொருவர் நாடுகளினிடையே சகோதரத்துவத்தை வளர்க்க சிறந்த முயற்சி எடுப்பவராக, அமைதி மாநாடுகள் நிகழ காரணமாக இருக்கின்றவர்ககின்றார்களோ” அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்.

நோபல் விதிமுறையின் படி பேரருட்தந்தை திரு. மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் நூற்றுக்கு இருநூறு வீதம் அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யக்கூடியவர்கள். இதன் அடிப்படையிலேயே ராஜாங்க அமைச்சர் அமீர் அலி அவர்கள் தனது பேச்சின் மூலம் வெளிப்படுத்திருக்கின்றார்கள்.

ஷிபான் BM.
மருதமுனை.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *