பிரதான செய்திகள்

ரஞ்சன் செய்த ஒரே! ஒரு மோசடி தனது வழுகை தலையை மறைத்து

ரஞ்சன் ராமநாயக்க செய்த ஒரே தவறு தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்தது. எனினும் அது தார்மீகம் சம்பந்தமான பிரச்சினையே தவிர சட்டரீதியான எந்த குற்றம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.


இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள உறுப்பினர்களில் அதிகமானோருக்கு எதிராக சுமத்தப்படும் நிதி, ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுக்களை கவனத்தில் கொள்ளும் போது, ரஞ்சன் ராமநாயக்க எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதால், அவருக்கு வேட்புமனு கிடைக்கும் வாய்ப்புள்ளது.


ரஞ்சன் ராமநாயக்க பொய்யோ, மோசடிகளையோ செய்யவில்லை. அவர் செய்த ஒரே மோசடி தனது வழுகை தலையை மறைத்து செயற்கை முடியை அணிந்தது.


இதனால், நாட்டு மக்களுக்கோ, சமூகத்திற்கோ எந்த தவறும் நடக்கவில்லை. அதுவும் தற்போது முழு நாட்டுக்கும் தெரியவந்துள்ளது.


அந்த மோசடியில் இருந்து விடுதலையாகி ரஞ்சன் தூய அரசியல்வாதியாக மாறியுள்ளார் எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மற்றவர்களின் துணை இல்லாமல் உங்களால் வெற்றியடைய முடியாத பல சூழ்நிலைகள்-கோத்தா

wpengine

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் வேண்டுகோள்!

wpengine

ராஜபக்‌ஷவை கொலையாளி என கூறியவர்களே! இன்று மோடியை வரவேற்க ஓடுகிறார்கள்.

wpengine