பிரதான செய்திகள்

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடம்!

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார்.

சட்ட ஆலோசனைகளை கருத்திற் கொண்டு ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற இருக்கை காலியாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயர்நீதிமன்றம் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹக்கீமின் காரியாலயத்தை கைப்பற்றிய அமைச்சர் றிஷாட்

wpengine

ஹக்கீம் மிகவும் இழி நிலைக்கு சென்றுவிட்டார்.

wpengine

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தீக்கிரையாக்கப்படும் அம்பிட்டிய சுமணரத்ன தேரர்

wpengine