முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி பெரெஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கை ஜூலை 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர்களான யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சம்பத் மெண்டிஸ், இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கவனம் செலுத்திய நீதவான், வழக்கை ஜூலை 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.
இந்த கோரிக்கை தொடர்பான விவகாரம் அன்றைய தினம் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.