பிரதான செய்திகள்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுண்தீவு பகுதிக்கு ஹிஸ்புல்லாஹ்வினால் உதவி

யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மீள்குடியேற்ற கிராமமான வவுணத்தீவு கிராமத்தில் நீண்டகாலாமாக நிலவிவரும் குடிநீர் பிரச்சினைக்கு, ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் 2 இலட்சம் ரூபா பொறுமதியான 15 நீர் தாங்கிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டு தற்காலிக தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் இதன் போது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை மேற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான வவுணத்தீவு பகுதிக்கு தற்காலிகமாக நீர் விநியோகம் செய்வதற்கு தேவையான 2 இலட்சம் ரூபா பொறுமதியான 15 நீர் தாங்கிகள் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் பெற்றுக்கொடுக்கப்படுள்ளது.

இதனை கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை மண்முனை மேற்கு பிரதேச செயலாளகத்தில் பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இதனை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் பொதுச்செயலாளர் மும்தாஸ் மதனி,  முன்னாள் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முஹம்மத் றுஸ்வின் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.unnamed-1

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு பின்தங்கியுள்ள பிரதேசங்களுக்கு விஜயம் செய்து வரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிவதுடன் – தீர்வினைப் பெற்றுக் கொடுத்தும் வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.unnamed-2

Related posts

கத்தாரில் 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது.

wpengine

றிஷாட் பதியுதீனுடைய கட்சியோடு கூட்டுசேரும் நிலை ஏற்படும்! நாமல் பா.உ. தெரிவிப்பு

wpengine

போதைப்பொருள் விற்பனை செய்த அமெரிக்க வைத்தியர் ரஷ்யாவில் கைது!

Editor