பிரதான செய்திகள்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விடு கிடைக்கும் -அமீர் அலி

(அனா)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சியில் எல்லோருக்கும் நல்ல விடயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள் நிச்சயம் நல்லது நடக்கும் என்று கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மீள்குடியேற்றும் மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் தியாவட்டுவான் கிராம சேவகர் பிரிவில் அமைக்கப்படவுள்ள வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்த உரையாற்றுகையில்.

நல்லாட்சி உருவாக்கப்பட்டு ஒரு வருட பூர்த்தி அடைந்துள்ள இந்த நாளில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கட்டம் கட்டமாக வீடு வழங்கப்படும் என்ற நற்செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம் தங்களுக்கு கிடைக்க வில்லை என்று கவலைப்பட வேண்டாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசாங்கத்தில் நல்லது நடக்கும்.

இந்த பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வேண்டும் என்று வாக்களித்தார்களோ அவர்களுக்குத் தெரியும் பிரதேசத்தில் நல்லது நடக்கும் என்று யார் யாரெல்லாம் அரிசி பேக்ககிற்கும் பணத்திற்காகவும் வாக்களித்தார்களோ அவர்களுக்கும் தெரியும் மக்களுக்கு யார் மூலம் சேவை கிடைக்கின்றது என்றும் தெரிவித்தார்.unnamed (1)

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எச்.எம்.சாஜஹான், பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எச்.எம்.தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.unnamed (4)

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் தியாவட்டுவான் கிராம சேவகர் பிரிவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அறுபத்தெட்டு (68) பயனாளிகளுக்கு மீள்குடியேற்றும் மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் தலா ஒவ்வொரு வீட்டுக்கும் எட்டு லட்சம் ரூபா பெறுமதியில் வீடுகள் பெறவுள்ளதாக பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தெரிவித்தார்.unnamed (2)

Related posts

வளைந்திருந்த முள்ளந்தண்டை சத்திர சிகிச்சை மூலம் சரிசெய்து இலங்கை மருத்துவர்கள் சாதனை

wpengine

அரச சேவையாளர்களுக்கு 2 வாரங்களில் வாகன உறுதிப்பத்திரங்கள்

wpengine

ரிஷாட் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

wpengine