அரசியல்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ். 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான அங்கிகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக புதன்கிழமை (13) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகைதந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜா, தொகுதி அமைப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட சிலரும் வருகை தந்திருந்தனர்.

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய:https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg

Related posts

மன்னார்- கண்டி பஸ்ஸில் முதியோர் திடீர் மரணம்

wpengine

பலி வாங்காமால் பலனடையுங்கள் முசலி பிரதேச சபைத் தவிசாளர் சுபியான்

wpengine

ஜப்பான் நிதியின் கீழ் மன்னார் மாவட்டத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான உதவி திட்டம்.

Maash