கட்டுரைகள்பிரதான செய்திகள்

யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும்! தமிழ் அரச அதிகாரிகளின் இனவாத நடவடிக்கையும்

(அபு அதாஸ்)
கடந்த 26.10. 2017 அன்று யாழ் கச்சேரி  முன்பாக தமக்கு நழிந்த வீடுகளுக்கான நஷ்ட ஈடு வேண்டும் என்றும் மீள்குடியேற்றச் செயலணியால் தெரிவு செய்யப் பட்ட 200 குடும்பங்களுக்கும் வீடு கட்டும் உதவிகளை நிபந்தனை இன்றீ வழங்கக் கோரியும் கோரிக்கைகளை முனவைத்து  முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மீலாத் விழா நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை கவனிக்க முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைஇசர் எம்.எச்.ஏ. ஹலீம் அவர்கள் தனது  அதிகாரிகளுடன் யாழ் மாவட்டச் செயலகத்துக்கு விஜயம் செய்யும் போது இக்கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப் பட்டது அமைச்சரின்  பிரத்தியேக கவனத்துக்கு யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளை கொண்டு சென்றுள்ளது.

இது சம்பந்தமாக மாவட்டச் செயலாளர் மற்றும் யாழ்ப்பாண அரசாங்க உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அமைச்சர் ஹலீம் தனது கவலையை வெளியிட்டதுடன் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப் படுவதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் முஸ்லிம்களுக்கு அந்த 200 வீடுகளையும் நிபந்தனைகளின்றி வழங்க நடவடிக்கை எடுக்கும் படியும் அமைச்சர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள மற்றும் ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டு மீளக் குடியேற துடித்துக் கொண்டிருக்கும் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீளக் குடியேற முனையும் முஸ்லிம்களுக்கு வேறு பிரதேசங்களில் காணியிருக்கின்றது என்று கூறீயே வீட்டுத் திட்டம் நிராகரிக்கப் படுகின்றது. 1990 வெளியேற்றப் பட்ட முஸ்லிம்கள் காடுகளிலும் வீதிகளிலும் தான் ஆரம்பத்தில் வாந்தனர். 27 வருடங்களுக்குப் பின்னரும் முஸ்லிம்கள்  இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்த ஈர்களில் வீடுகள்   இன்றீ வாழ வேண்டும் என்று யாழில் உள்ள தமிழ் அரசாங்க அதிகாரிகள் விரும்புகின்றார்கள்.

இவ்வாறான அனீதிகளைக் கண்டித்தே மேற்படி கவனயீர்ப்புப் போராட்டம் இடம் பெற்றது. இந்த நிகழ்வு கடந்த 270 வருடங்களுக்கு முன்பு இதே போன்று அநீதியிழைக்கப் பட்ட முஸ்லிம்கள் 1740 களில்  ஒல்லாந்தர் காலத்தில் செய்த  ஆர்ப்பாட்டத்தை நினைவு கூறுகின்றது.

1480 களில் இந்துக்களின் சைவக் கோவில் நல்லூர் முத்திரைச் சந்தியில் இருந்து செம்மணிச் சுடலை நோக்கிச் செல்லும் வீதியில் தான் அமைந்திருந்தது. (யாழ்ப்பாணச் சரித்திரம் – . குணராசா)
 1620 இல் போர்த்துக்க்கீசருடன் இடம்பெற்ற சண்டைகளில் 3000 முஸ்லிம்கள் கொல்லப் பட்டதாலும் முஸ்லிம்களை தொடர்ந்தும் போர்த்துக்கீசர் தாக்கி வந்ததாலும் நல்லூரிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் வாழ்ந்த 18500 முஸ்லிம்கள் யாழ்ப்பானத்திலிருந்து வெளியேறி இருந்தனர்.

 492 குடும்பங்கள் முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. இவர்கள் மீண்டும் பல்கிப் பெருகியதோடு நல்லூரில் அழிக்கப் பட்ட பள்ளிவாசலை சுத்தப் படுத்தி  செம்மைப் படுத்தியிருந்தனர்.

முஸ்லிம்களை பலவீணப் படுத்தும் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரியில் இருந்து இந்துக்களை கொண்டுவந்து போர்த்துக்கீசர் வெளியேறிய முஸ்லிம்களின் காணிகளில் குடியேற்றினர்.  இக்காலத்தில் உயிர் இழப்புகள் வெளியேற்றம் மேலும் போர்த்துக் கீசரின் கெடுபிடிகளால்   முஸ்லிம்கள் பல்மிழந்து இருந்தனர்.  முத்திரைச் சந்தியில் இருந்த (கிட்டு பூங்காவுக்கு பக்கத்தில்)  இந்துக் கோவில் போர்த்துக் கீசரால் இடிக்கப் பட்டு அதில் சென் ஜேம்ஸ் தேவாலயத்தை நிறுவியிருந்தனர்.

கோவிலை மீளக் கட்ட   எண்ணிய தமிழர்கள் முஸ்லிம்களின் பள்ளிவாசல் இருந்த இடத்தைப் பிடித்து அங்கு கட்ட திட்டமிட்டிருந்தனர்.  தங்களின் கோவிலை முஸ்லிம்களின் பள்ளிவாசல் அமைந்திருந்து வளவுக்குள் அமைக்க வேண்டுமென்பதில் 17 ஆம் நூற்றாண்டில் நல்லூர் சங்கிலியன் தோப்புக்கு அப்பால்  இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய கன்னியாகுமரியைச் சேர்ந்த இந்து வேளாளரின் எண்ணமாக இருந்தது.

17 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட போது ஒல்லாந்தர் காணிப்பதிவுகளை மேற்கொண்டனர். இதன் பிரகாரம் நல்லூர் முதல் சுண்டிக்குழி, கொழும்புத்துறை ஆனைப் பந்தி போன்ற இடங்களில் எல்லாம் பெரும்பாண்மையான காணிகள் முஸ்லிம்களின் பெயரிலேயே  இருந்தது. இதனை முன்னாள் காணிப்பதிவாளரும் யாழ்ப்பாண வரலாற்று ஆசிரியருமான க. குணராசா அவர்கள் பிற்காலத்தில் ஆய்வு செய்து  உறுதிப் படுத்தியிருந்ததுடன்  இது ஒரு கசப்பான உண்மை என்பதாக தனது வரலாற்றுக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததை ‘அகதி ‘ என்ற சஞ்சிகை மீளப் பிரசுரிந்திருந்தது.

இருந்தாலும் முஸ்லிம்களை வெளியேற்றும் திட்டத்தின் ஒரு கட்டமாக நல்லூரில் முஸ்லிம்களின் கிணறுகளில் வெட்டப் பட்ட பன்றிகள்  கன்னியாகுமரி இந்துக்களால் போடப் பட்டது.  அத்துடன் முஸ்லிம்களின் வீடுகளும் எரிக்கப் பட்டன. இதனால் முஸ்லிம்கள் குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டு ஓடியதாக யாழ்ப்பாண வைபம மாலை உட்பட பல்வேறு வரலாற்று நூற்களில் எழுதப் பட்டுள்ளது.

இந்த கொடுஞ்செயலுக்கு எதிராக முஸ்லிம்கள்  1744 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் யாழ் கச்சேரிக்கு முன்பாக  முஸ்லிம்களுக்குச் சொந்தமான பழைய பூங்காவில் ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர்.

தற்போது 273 வருடங்களுக்குப் பின்னர் 1990 ஒக்டோபரில் தமிழ் விடுதலைப் புலிகளால் ஆயுதமுனையில் கொள்ளையடிக்கப் பட்டு வெளியேற்றப் பட்டு இனச் சுத்திகரிப்புச் செய்யப் பட்ட முஸ்லிம்கள் தமக்கு வழங்க வேண்டிய வீடுகளுக்கான நஷ்ட ஈடுகளை கேட்டு அதே இடத்தில் (பூங்காவுக்கு முன்னால்) ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை தமிழ் அரசியல் வாதிகளும் தமிழ் அதிகாரிகளும் ஏற்படுத்தியுள்ளமை வேதணையான விடயமாகவுள்ளது.

தமிழ் மக்கள் முஸ்லிம்களுடன் சேர்ந்து வாழ விரும்பும் அதே வேளை  தமிழ் அரசாங்க அதிகாரிகளும் சில தமிழ் அரசியல் வாதிகளும் முஸ்லிம்களுக்கு நஷ்ட ஈடு கிடைப்பதை வேண்டுமென்றே தடுத்துவருவதாக  அங்கு பேசிய பிரமுகர்கள் குற்றச் சாட்டுக்களை முன்வைத்தனர்.

மேலும் 200 வீடுகளை வழங்காமல் இன்னும் சில நாட்கள் இழுத்தடித்தால் அந்தப் பணம் மீளவும் திறைசேரிக்குச் சென்றுவிடும் என்று தெரிந்திருந்தும் முஸ்லிம்களை அதிகாரிகள் ஏமாற்றுவதாக போராட்டம் நடத்தியவர்கள் மத்தியில் பேசத்தக்க பிரமுகர்கள் தெரிவித்தனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான அநீதி தொடருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Related posts

புற்றுநோயை ஏற்படுத்தும் பருப்பு கண்டுபிடிப்பு!

Editor

உயர் திறனுடன் சேதன பசளையை உற்பத்தி செய்யாத நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும்

wpengine

ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதியின் கடுமையான உத்தரவு

wpengine