பிரதான செய்திகள்

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன இன்று வியாழக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.

அதன்பின்னர், பௌத்த, இந்து, இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ மத வழிபாட்டினை தொடர்ந்து பதிவேட்டில் கையொப்பமிட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மாத்தளை பொலிஸ் பிரிவில் சிரேஸட் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய இவர் யாழிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபராக இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டார்.

தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், சட்டம் மற்றும் நீதிக்கு அமைவாக யாழில் நடைபெறும், குற்றச்செயல்களை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை நீதியின் வழியில் மேற்கொள்வேன் என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.1530504660Police

Related posts

ஒரு நாளில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு

wpengine

செல்போனினால் உயிரை இழந்த இளம் வாலிபன்

wpengine

அய்யூப் அஸ்மின் அமைச்சர் றிஷாட்டை விமர்சிப்பதன் மூலம் தமிழ் கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது என்ன?

wpengine