பிரதான செய்திகள்

யாழ் மாவட்டத்தில் 8 சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை! ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

யாழ். மாவட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 8 பேர் திணைக்கள மட்ட ஒழுக்காற்று நடவடிக்கையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். மாவட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பலருக்கு எதிராக சமுர்த்தி திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், அது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இந்த விசாரணைகளின் போது பண மோசடியில் ஈடுபட்ட 5 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிர்வாக ரீதியான குற்றப்பத்திரம் வழங்கியுள்ளனர்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு உட்டபட்ட மூன்று உத்தியோகத்தர்களும், கரவெட்டி, சாவகச்சேரி பிரதேச செயலகங்களுக்கு உட்டபட்ட பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தலா ஒரு உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், மூன்று சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு எதிராக பண மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கோப்பாய், தெல்லிப்பளை, மற்றும் ஊர்காவற்துறை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தலா ஒரு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மீது இவ்வாறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு திணைக்கள ரீதியான கண்க்காய்வுகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு விசாரணைகளில் உள்ளவர்களில் மூவர் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மண்டைத்தீவில் சிறுமி ஒருவரிடம் தவறாக நடக்க முற்பட்ட வேலனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தருக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளைய தினம் ஊரடங்கு வதந்திகளுக்கு ஏமாற வேண்டாம்

wpengine

வன்னிக்கு தேசியப்பட்டியலா?

wpengine

வடக்கு,கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைத்தொழில் துறையினை உயர்த்த வேண்டும் மன்னாரில் அமைச்சர் றிஷாட்

wpengine