Breaking
Sat. Nov 23rd, 2024
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 2016 ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தி நன்கொடையின் (PSDG) கீழ், யாழ் மாவட்ட வீதிகளைப் புனரமைப்பதற்கு 134 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட , மண்டைதீவு லூப் வீதியின் வேலைத் திட்டத்தை 28-04-2016 வியாழன் மாலை 4.30 மணியளவில் ஆரம்பித்து வைத்த வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்

அவர்கள், அங்கு உரையாற்றுகையில்

எமது மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறு வீதி அபிவிருத்திக்கான பல கோரிக்கைகள் இருந்தபோதும் மிகவும் அவசியமாக தேவைகள் இருக்கின்ற வீதிகளை தெரிவு செய்து தரமாகவும் மக்களுக்கு உகந்ததாகவும் வீதிகளை அமைக்க வேண்டும் என்று எனது வீதி அபிவிருத்தி பணிப்பாளருக்குத் தெரிவித்துளேன் என்றும், அந்த வகையில் யாழ் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 134 மில்லியன் ரூபாய் நிதியில் சுமார் 29 வீதிகள் தெரிவு செய்து புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

b060b9a4-3cab-4412-899a-4636edc5b369

நிகழ்விற்கு பங்குத்தந்தை, வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் பா.கஜதீபன், அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திரு.டி.சிவராஜலிங்கம், வேலணை பிரதேச செயலாளர் திருமதி.சு.தெய்வேந்திரம், வீதி அபிவிருத்தித் திணைக்கள யாழ் மாவட்ட பிரதம பொறியியலாளர் திரு.வி.முரளீதரன், யாழ் மாவட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர் திருமதி.அபிராமி வித்தியாபரன், மற்றும் கிராம சேவகர், அக்கிராமத்து அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலய சபையினர், கிராமத்து மக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.bc98d1d9-9c82-4227-a366-1b3809aac5ba496a7930-b76d-4efa-9168-33e2a3a41f25
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *