பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் நெல்லியடியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், அந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனடிப்படையில் இன்றுக்காலை மு தல்வரிடமும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றின் முடிவில் முதல்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. 

அதேவேளை ,20ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்தோர். தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்ளுமாறும் , சுகாதார பரிசோதகர்களுக்கு தங்களது விபரங்களை வழங்குமாறும்  முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Related posts

கொழும்பு முஸ்லிம் மகளிா் கல்லுாாியின் வருடாந்த பரிசளிப்பு விழா;பிரதம அதிதியாக ரணில்

wpengine

தாறுஸ்ஸலாமின் முடிச்சு அவிழ்க்கப்படுமா? முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்குப் பகிரங்க மடல்

wpengine

கடாபியின் முடிவே வடகொரிய தலைவருக்கு ஏற்படலாம் ட்ரம்ப்

wpengine