பிரதான செய்திகள்

யாழ்- மன்னார் வீதியில் வாகன விபத்து! பொலிஸ் அதிகாரி மரணம்

யாழ்ப்பாணம்-  மன்னார் பிரதான வீதியின் சங்குப்பிட்டி பிரதேசத்தில் டிப்பர் வண்டி ஒன்று, பொலிஸ் கான்ஸ்டபில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் பலியாகியுள்ளார்.  

யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 48 வயதான கான்ஸ்டபில் ஒருவரே இதன்போது பலியாகியுள்ளார்.

கான்ஸ்டபிளின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பூநகரி பொலிஸார்  விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர்.

Related posts

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சதொச நிறுவனத்தை பொறுப்பேற்றதன் பின்னர் ஊழல்களும் மோசடிகள் இடம்பெறவில்லை! சதொச நிறுவனத்தின் தலைவர்

wpengine

மன்னார் பொது வைத்தியசாலையின் அமந்த போக்கு! றோகினியின் மரணம் சொல்லும் உண்மையும்?

wpengine

150ஆவது ஆண்டு நிறைவு! புதிய 20 ரூபாய் நாணயங்கள் வெளியிடு

wpengine