பிரதான செய்திகள்

யாழ் புளொட் காரியாலயத்தில் ஆயுதம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் புளொட் அமைப்பின் பழைய அலுவலகத்தில் இருந்து பாரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் புளொட் அமைப்பின் பழைய அலுவலகத்தில் இருந்தே குறித்த ஆயுதங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த சம்பவத்தில் புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யுத்த காலத்தில் குறித்த வீடு புளொட் அமைப்பின் காரியாலயமாக இருந்துள்ளது. யுத்தம் முடிவுற்ற நிலையில் அந்த வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், புளொட்டின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் மட்டும் அந்த வீட்டில் தங்கியுள்ளார்.

இந்த நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் இருந்து வந்து வீட்டை கேட்டுள்ளார். இதற்கு அந்த நபர் மறுப்பு தெரிவிக்க, வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற யாழ். பொலிஸார் சென்று, அங்குள்ள பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த அலுமாரி ஒன்றுக்குள் துப்பாக்கிகள், ஏகே 47 துப்பாக்கி ஒன்று, கைத்துப்பாக்கி ஒன்று, அவற்றுக்கு பயன்படுத்தும் மகஸின்கள் 4 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன.

அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தொடர்ந்து குறித்த பகுதிக்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர், அந்த வீட்டை சுற்றிவளைத்துள்ளதுடன், வீட்டை தோண்டி முழுமையான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

கணவனை இழந்த மற்றும் தாய் , தந்தையை இழந்த 50 குடும்பங்களுக்கு புனித ரமழானை முன்னிட்டு உதவ முன்வாருங்கள்.

wpengine

அடுத்த வாரம் தபால் வாக்களிப்பு

wpengine

சமூக வலைத்தளங்கள் மீதான தடை மக்கள் மத்தியில் சந்தேகம் மஹிந்த

wpengine