பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழ் பாடசாலைகள் அனைத்தும் நாளை முதல் மூடப்படும்!

யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும், அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநர் மற்றும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கபட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வீட்டுக்கு வீடு மரம் நடுகை திட்டம் வவுனியா செட்டிகுளத்தில் ஆரம்பம்

wpengine

பிரசாரங்களை பேஸ்புக் நிறுவனம் கட்டுப்படுத்தவேண்டும்

wpengine

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் கால அவகாசத்தில் , 13 ஆவது திருத்தம் மாற்றமில்லாமல் அமுல்.!

Maash